Tuesday, October 28, 2014

ரௌத்ரம் பழகு.. !?

கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது.. நிகழ் கால நடப்புகளில் தனி மனிதனின் உணர்வுகள், தனி மனித இரக்கம் ஆகியவை மிக சுலபத்தில் பிறரின் சுய லாபத்துக்காக பயன்படுத்திக்கொள்ள படுகிறதென்று நினைக்கும் போதே. அலுவலகம் முடிந்த பின் 12'ஐ நெருங்கும் முன்னிரவு வேளையில் தேநீர் அருந்தும் பழக்கம் எனக்குள் வாடிக்கை. சென்ற வாரம் வழக்கமாக தேனீர் அருந்தும் கடையில் தேநீர்காக நின்ற பொழுது ஒரு நடுத்தர வயதுள்ள முன் அறிமுகமில்லா மனிதர் அவசரமாக என்னிடம் பணம் கேட்டார். அருகில் உள்ள பேக்கரி'யை காட்டி "Salt bread" வாங்க போவதாக சொன்னார். நானும் ஒன்றும் கர்ண பரம்பரை இல்லைதான், ஆனால் ஒரு முன்னிரவின் இந்த கேள்வி எங்கேயோ இருக்கும் பசி படிந்த முகத்தை என் நினைவில் நிழலாடியது. கையில் தேநீர்காக எடுத்திருந்த 20 ரூபாயை கொடுத்தேன், அதிகபட்சம் இந்த உரையாடலும் அதைதொடர்ந்த கொடுக்கலும் ஒரு 15 வினாடிக்கும் குறைவாக நிகழ்ந்து இருந்தது. அடுத்த 30வது வினாடி எனக்கான சவுக்கடி காத்து இருந்தது. அந்த மனிதர் அதே பேக்கரியில் இருந்து தன் மதுவுக்காக "உப" பொருட்களை வாங்கி கொண்டிருந்தார். நொந்து போனேன். நான் வாங்கிய தேநீர் தொண்டையில் இறங்க மறுத்தது, 20 ரூபாய் ஒன்றும் பெரிய தொகை இல்லைதான் ஆனால் அதைவிட தான் ஏமாற்ற பட்டோம் என்ற எண்ணம் எழுந்த அந்த வினாடி நெஞ்சம் கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது. அவன் சட்டையை பற்றி இரண்டு விளாசு விளாசியிருக்கலாம் அல்லது சினிமா பட கதாநாயகன் போன்று பேசியே திருத்தி இருக்கலாம். அனால் இவை இரண்டும் நிகழ்காலத்தில் நடவாத ஒன்று. குடிக்காக பிறரை ஏய்க்கும் அந்த "நல்ல" உள்ளத்திடம் நள்ளிரவில் ஒரு பஞ்சாயத்து வேண்டுமா என்று ஒதுங்கி கொண்டேன். இந்த சமூகமும் எனக்கு பழக்கிய அதிகபட்ச தற்காப்பு ஆயுதமும் அதுதான். "ஒதுங்குதல்" பெரும்பாலான பிரச்சனையான நேரங்களில் குடும்பத்தாரும் இந்த சமூகமும் அறிவுறுத்தும் ஒரு பிரதான ஆயுதம். நான் வாசித்த புத்தகங்களும் அவை எனக்கு வழங்கியதாய் எண்ணிய வீரமும், அநியாயத்துக்கு எதிரான போராட்ட உணர்வும் நிகழ்கால வாழ்க்கையின் நடைமுறை எதார்த்தத்தில் இருந்து வெகுதூரம் இருப்பதாய் எண்ணி கொண்டேன். எந்த புத்தகமும் நடைமுறை எதார்த்தத்தை உறைப்பதில்லை போலும். பாரதியை கண்டு நான் பழகிய "ரௌத்ரம்" வெறும் ஏட்டளவில் தான் இருக்கிறது போல் என்னுள் இன்னும்.

Tuesday, September 23, 2014

கண்ணாடி ஓவியங்கள்

கண்ணாடி ஓவியங்கள்.

என் ஓய்வு நேரம் கண்ணாடிகளில் பிரதிபலிக்கிறது..
முகபுத்தகம் அலுத்துப்போன , தொலைகாட்சி வெறுத்து போன கடந்த வாரத்தின் ஞாயிற்று கிழமையின் சில மணித்துளிகள் தந்த படைப்புக்கள்.





அதி உன்னத படைப்பாக ஒரு குறையில்லாமல் என்னால் இவைகளை செய்திட இயலவில்லை தான் ஆனால்  இவைகளுக்காக செலவிடும் நொடிகள் ஒவ்வொன்றும் என் இதயத்திற்கு நெருக்கமானவையாக, என் விருப்பத்திற்கு உரியவையாக உள்ளது.



Friday, September 12, 2014

ஒரு வழியா Post போட்டாச்சு.. !!!!

ஆச்சு.
ரொம்ப நாளா விட்ட குறை தொட்ட குறையா இருந்த எழுதற எண்ணத்தை எப்படியாவது நிறைவேத்திடனும்னு தோணுச்சி.

ஏன்.?? சத்தியமா எனக்கும் தெரியல. எல்லாரும் எழுதறாங்க நாமளும் எழுதுவோம். மத்தபடி சமுதாயத்த மாத்திட எழுத வந்துருக்கேன்'னு நான் சொன்னா கும்பல் கூடி பேசி சிரிப்பாங்க.. அது நமக்கு வரவும் வராது.

இங்க ஏற்கனவே சமுத்திரம் மாதிரி இருக்க எழுத்தாளர் உலகத்துல (நான் இன்னும் எங்க இருக்கேன்'னு தெரியலை யுவர் ஆநர்!?) பல திமிங்கிளங்களும் சுறாக்களும் போட்டி போட்டு படைப்பை கொடுக்கும் போது சின்ன நெத்திலி ஸைஸ் இருக்கற நாம என்ன பண்ண முடியும்னு தோணுது. இருக்கட்டும் அட்லீஸ்ட் இட்லி தூள் அரைக்கவாவது / கருவாடா வாவது யூஸ் ஆவோம்னு முடிவு பண்ணி எறங்கியாச்சு.

அடுத்து நடு ராத்திரினு  கூட பாக்காம பல்ல காட்டி சிரிக்க வெச்சது எத பத்தி எழுத போறோம்னு நான் பண்ண பல சிந்தனைகள்.
உலக அரிசியல பத்தி எழுதலாமா??. அது சரி. உள்ளூர்லயே யார் கவுன்சிலர் னு தெரியாத நாம எப்டி அத எழுதறது, எங்கயாவது தப்பா எழுதிட்டா இணைய வாசகர்கள் நம்மள ஒரு இன்டர்நேஷனல் தீவிரவாதி ரேஞ்சுக்கு மெரட்டி திட்டுவாங்களே.

இன்றைய இலக்கியம் பத்தி பேசலாம்னு நெனச்சேன்.. But கடைசியா இலக்கியம்'ன்ற வார்த்தையை 10வது படிக்கும் போது தமிழ் புக்'ல பாத்ததா ஞாபகம்..

சினிமா பத்தி எழுதலாம் நெனச்சேன், What a wonderful topic , இது எப்டி இவ்ளோ நேரமா தோணாம போச்சுனு topic கிடைச்ச சந்தோஷத்துல தூங்கியாச்சு. காலைல எழுந்து பேப்பரும் பேனாவும் வெச்சி ஒக்காந்து கடைசியா எழுதுனது தலா 4 நடிகர் , 3 நடிகை , 2 படம் பெயர் தான். அதுவும் ரெண்டும் ஓடாத படங்களாம் (அடுத்த நாள் நண்பர் சொன்ன தகவல் அது). எந்த படம்னு சொல்லலாம் but முதல் நாளே அடி தடிக்கு உடம்பு இன்னும் தயார் ஆகல. so topic skipped.

கார்ப்ரேட் அராஜகம் / தொழிலாளர் நலன் மற்றும் கொத்தடிமை IT வேலை பத்தி எழுதலாம்னு நெனைச்சா  அடுத்த மாதம் வாங்க போற சம்பளம் நினைவுக்கு வந்துது .நம்ம சோத்துக்கு நாமே சூனியம் வேச்சுகனுமானு அதுவும் வேணாம்னு முடிவு பண்ணியாச்சு.

என்னாச்சு.. நாமளும் காலேஜ் படிக்கையில நல்ல தான எழுதுனோம் இப்ப ஏன் வரலைன்னு வேற ஒரு சிந்தனை..

IT கம்பெனில வேலைக்கு வந்த இந்த நாலு வருஷத்துல "நமக்கு நேரமே இல்லைன்னு எனக்கு நானே சொல்லிகிட்டே வெத்து சமாதானம் தான் ஞாபகத்துக்கு வந்துது".அடடடா.. ரொம்ப பெரிய தப்ப பண்ணிட்டோமேன்னு சத்தியமா மனசாட்சிக்கு தோனல. ஏன்னும் தெரியல.

எப்படியாவது இனி எழுதணும், எழுதும் இலக்கியமும் தான் இனி நம் கண்கள்னு ராத்திரில எனக்குள்ள கோரஸ் கேக்குது, ஒரு வேளை ஆரம்பத்துல எழுத வந்த எல்லார்க்கும் இதே தான் கேட்டுதானு தெரியலை. ஆகஸ்ட் 29 எடுத்த கொள்கை, இனிமேல் எப்படியாவது வாரத்துக்கு ரெண்டு முறை எழுதிடணும்னு அப்படியும் பத்து நாள் தள்ளி செப்.12 தான் எழுதறேன்.

இந்த இடைப்பட்ட நாட்கள்ல பெரிசா ஒன்னும் பண்ணிடல. எப்பயும் பண்ற "எதாவது பண்ணனும் Boss" அப்படின்ற நெனைப்பு மட்டும்தான். பேசாம எத பத்தி எழுதலாம் நாம பண்ண சிந்தனைகளேயே எழுதிடலாம்னு ஒரு சமாதான உடன்படிக்கையை என் மனசு கூட பண்ணிக்கிட்டு Type பண்ணியாச்சு. நெஜ கஷ்டமே இப்போதான். தமிழ்la type பண்ண நான் பட்ட பாட்டை சொல்லி மாளாது. 

நல்லா இருக்குமா ??, எல்லாரும் படிப்பாங்களா??, யார் படிப்பங்கனுலாம் ஒன்னும் தோனல. எழுதணும்னு தோனுச்சி எழுதியாச்சு . இனிமேலும் எழுதுவோம். எழுத எழுத கையெழுத்தே அழகாகும் போது, எழுத்தின் நடையும், மிடுக்கும் அழகா ஆகாதா என்ன?. 

இப்பதான முதல் "" எழுத பழகறோம். :)